பிரபல தமிழ்ப்பட நடிகை பூர்ணாவுக்கு திருமணம்! வெளியான வீடியோ
சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்த நிலையில், துபாயில் நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நடந்துள்ளது
பூர்ணா - ஷானித் திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்
துபாயில் நடிகை பூர்ணாவுக்கும், தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலிக்கும் திருமணம் நடந்தது.
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, வித்தகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ஷாம்னா கஸிம் என்ற இயற்பெயர் கொண்ட பூர்ணாவுக்கும், JBS குழு நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஷானித் ஆசிப் அலிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயம் நடந்தது.
இந்த நிலையில் இவர்களின் திருமணம் துபாயில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
பூர்ணாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. ரசிகர்கள் பலர் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.