இரவு நேரத்தில் என்னை வன்கொடுமை செய்ய முயன்றார்! கொல்லவும் துணிந்தார்... கோடீஸ்வரர் மீது பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு
பிரபல நடிகை போரி மோனி தன்னை கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, கொலை செய்யவும் முயற்சித்ததாக அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.
28 வயதான பிரபல வங்கதேச நடிகை மோனி இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டு தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முதல்வர் ஷேக் ஹசினாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தொழிலதிபர் நசீர் யூ முகமது கடந்த 4 நாட்களுக்கு முன்னர் டாக்கா போட் கிளப்பில் இரவு நேரத்தில் தன்னை தாக்கி இப்படி நடந்து கொண்டதாக மோனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நான் ஒரு பெண், நடிகை, மனிதர், என்னால் அமைதியாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரி சோஹேல் கூறுகையில், மோனி தங்களை தொடர்பு கொண்டால் இந்த சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.