மருத்துவராக என் அம்மாவுக்கு கடினமான நேரம்.. குழந்தைக்கு தாயான பிரபல தமிழ்ப்பட நடிகை!
பிரபல நடிகை பிராணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொழிலதிபர் நிதின் ராஜூவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரணிதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது தாயார் குறித்து கூறுகையில், 'ஒரு மகப்பேறு மருத்துவரான அம்மாவை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆனால் இது அவருக்கு கடினமான நேரம். மருத்துவர் சுனில் ஈஸ்வர் மற்றும் அவரது குழுவினர் அதிர்ஷ்டவசமாக எங்களுடன் இருந்ததால் பிரசவம் சீராக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
நடிகை பிராணிதாவுக்கு நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.