தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகைக்கு திருமணம்! வெளியான தம்பதியின் புகைப்படம்
பிரபல நடிகை பிரணிதா சுபாஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தமிழில் உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் பிரணிதா சுபாஷ்.
இவர் தெலுங்கு, கன்னட திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரணிதாவுக்கும், நிதின் ராஜூ என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் பிரணிதாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தை ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தவே பிரணிதா முதலில் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் தற்போது பிரணிதா - நிதின் திருமணம் நடந்துள்ளது.