இவ்வளவு வக்ரமாகவும் மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா? ராஜாராணி சீரியல் நடிகை ஆதங்கம்
பிரபல நடிகை பிரவீனா பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
கைதாகி விடுதலை
தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளவர் பிரவீனா. இவர் ராஜா- ராணி, பிரியமானவள் உட்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக பிரவீனா அளித்தப் புகாரை அடுத்து கடந்த வருடம் பாக்யராஜ் என்ற மாணவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மனநோயாளி
இந்நிலையில் பிரவீனா மகளும் சைபர் கிரைம் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி பிரவீனா கூறும்போது, நான் பொலிஸ் புகார் கொடுத்ததையடுத்து பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த நபர் செயல்பட்டு வருகிறார்.
என் மகள், அம்மா, சகோதரி, நண்பர்கள் ஆகியோரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு வருகிறார். இவ்வளவு வக்ரமாகவும் மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா?
இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம் என்றார்.