வாழ்வதா... சாவதா என்றே தெரியல! அனாதையாக நிற்கிறேன்.. பிரபல தமிழ் திரைப்பட நடிகை கண்ணீர்
யார் ஆதரவும் இல்லாமல் அனாதையாக இருப்பதாக பிரபல நகைச்சுவை நடிகை வேதனை தெரிவித்துள்ளார்.
பிரேம பிரியா
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளவர் நடிகை பிரேம பிரியா. தற்போது பட வாய்ப்பு இல்லாமல்,கணவரை பறிகொடுத்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.
பிரேம பிரியா அளித்த பேட்டியில், எங்களைப் போன்ற சிறு கலைஞர்களுக்கு ஒரு நாளைக்கு பெரிதாக எந்த சம்பளமும் கிடைத்துவிடாது. தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லை, இயக்குனரான என் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
அனாதையாக நிற்கிறோம்
இதுவரைக்கும் சினிமா வட்டாரத்திலிருந்து யாரும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நானும் எனது குழந்தையும் இப்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் அனாதையாக இருக்கிறோம்.
வாழ்வதா... சாவதா என்றே தெரியாமல் மிகவும் மன வேதனையில் அனாதையாக நிற்கிறோம் என கூறியுள்ளார்.