துருக்கி, சிரியா காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன! மனமுடைந்த பிரபல தமிழ் நடிகை
பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகள் குறித்து பிரபல தமிழ் நடிகை பிரியா ஆனந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் உள்ள கட்டிடங்கள் அடுத்தடுத்த சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கங்களால் உருகுலைந்தன.
இந்த பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் என மொத்தம் 9,630 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@Omar Haj Kadour/AFP/Getty Images
மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பிரபல தமிழ் நடிகை பிரியா ஆனந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகவும் நெஞ்சை பதற வைக்கின்றன. அனைவரையும் என் பிரார்த்தனையில் வைத்திருக்கிறேன்' என கூறியுள்ளார்.
The visuals coming out of #Turkey #Syria are soo gut wrenching ? Keeping everyone in my prayers…
— Priya Anand (@PriyaAnand) February 8, 2023