நீண்ட நாள் காதலரை திருமணம் செய்த பிரியா பவானி சங்கர்
actress priya bhavani shankar married her longtime boy friend rajvel: பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார்.
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.

அதன்பின்னர், 2017 ஆம் ஆண்டில் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமான அவர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2, டிமான்டி காலனி 2, ஹாட் ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே பிரியா பவானி சங்கர், ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்தார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர் திருமணம் இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேலை நடிகை பிரியா பவானி சங்கர் இன்று திருமணம் செய்துகொண்டார்.
Marriage💍 Priya Bhavani Shankar tied the knot with her longtime boyfriend Raj Velu💥 https://t.co/YSRRQkZ63o
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 11, 2026
புதுமண தம்பதிக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதே நாளில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.