அழகின் உச்சம் பிரியங்கா! தமிழ் சினிமாவில் தொடங்கி உலகை ஆண்ட நாயகி: அவரின் சொத்துமதிப்பு
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று உலக பிரபலங்களில் முக்கியமான ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸின் வெற்றிக்கதை இதோ.
இந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா ஜோனஸ், தற்போது உலகளவில் அறியப்பட்ட ஒரு தொழில்முனைவோராகவும் உயர்ந்துள்ளார்.
2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு, தமிழ் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கிய ப்ரியங்கா, பின் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரண்டு திரையுலகிலும் தனது திறமையால் வெற்றிக் கொடி நாட்டினார்.
திரைப்பட வாழ்க்கை
தமிழ் திரைப்படமான "தமிழன்" (2002) மூலம் தனது திரைப்பட பயணத்தைத் தொடங்கிய ப்ரியங்கா, அதைத் தொடர்ந்து "தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை" (2003) என்ற பாலிவுட் படத்தில் நடித்தார்.
"Andaaz" (2003), "Mujhse Shaadi Karogi" (2004) போன்ற வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்த இவர், 2004 ஆம் ஆண்டில் வெளியான "Aitraaz" என்ற படத்தின் மூலம் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார். "க்ரிஷ்" (2006), "டான்" (2006) போன்ற உயர் வசூல் படங்களில் நடித்த இவர், பின்னர் இந்த படங்களின் தொடர்ச்சிகளிலும் நடித்தார்.
2008 ஆம் ஆண்டில் வெளியான "Fashion" என்ற படத்தில் ஒரு தொந்தரவுக்குள்ளான மாடலாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார்.
ஹாலிவுட் பயணம்
2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அமெரிக்க தொலைக்காட்சி தொடரான "Quantico"வில் நடித்த ப்ரியங்கா, அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த முதல் தென்னாசிய நடிகை என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம், ஹாலிவுட் திரையுலகிலும் தனது முத்திரையை பதித்தார்.
தொழில்முனைவோர் அவதாரம்
திரைப்பட உலகில் மட்டுமல்லாமல், தொழில்முனைவோர் துறையிலும் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
Bumble, Holberton School, Apartment List உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
மேலும் அனாமலி(Anomaly) என்ற இயற்கையான முறையில் அழகை மேம்படுத்தும் ஹேர் கேர் பிராண்ட் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
அனாமலி 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிவேகமாக வளரும் அழகு பிராண்டுகளில் ஒன்றாக மாறியது.
உலகளாவிய அங்கீகாரம்
பத்ம ஸ்ரீ விருது (2016) உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
டைம் இதழின் "உலகின் 100 செல்வாக்குமிக்க மனிதர்கள்" (2016) மற்றும் ஃபோர்ப்ஸ் இதழின் "உலகின் 100 மிகவும் பவர்ஃபுல் பெண்கள்" (2017, 2018) பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.
பிரியங்கா சோப்ரா ஜோனாஸின் சொத்து மதிப்பு
Celebrity Net Worth என்ற இணையதளத்தின் தகவல்படி, ப்ரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் அவரது கணவர் நிக்க் ஜோனாஸ் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 580 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகை, மும்பை மற்றும் கோவாவில் உள்ள பல சொத்துகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Priyanka Chopra Jonas biography,
Priyanka Chopra Jonas’s net worth,
Priyanka Chopra Jonas movies,
Priyanka Chopra Jonas’s husband,
Priyanka Chopra Jonas Awards,
Priyanka Chopra Jonas’s instagram,
Priyanka Chopra Jonas philanthropy,
Priyanka Chopra Jonas entrepreneur,
Priyanka Chopra Jonas latest news,