கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம் செய்த நடிகை ராதா: இவரின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ராதா தனது மகளுக்கு கிலோ கணக்கில் நகைகள் போட்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ராதாவின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ராதா
தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா.
இவர் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
ராதா நடித்த முதல் படமே ஹீட் ஆனதால் வாய்ப்பு குவிய ஆரம்பித்தது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது ஷோபன் பாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து தெலுங்கிலும் நடித்தார்.
நடிப்பில் மாத்திரமின்றி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தியே வந்தார். ஹோட்டல் தொழிலதிபர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு முற்றிலும் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி விட்டார்.
இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதில் மகளுக்காக கிலோ கணக்கில் நகைகளை செய்து அணிவித்துள்ளார்.
நடிகை ராதாவின் சொத்து மதிப்பு
நடிகை ராதா தனது மூத்த மகள் கார்த்திகாவின் திருமணத்தை படு கோலாகலமாக அண்மையில் நடத்தி முடிந்தார்.
தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டு புடவை, கை, கழுத்து என கிலோ கணக்கில் தங்க ஆபரணங்கள் என அனைத்தும் செய்துள்ளார்.
நடிப்பிலும் சம்பாரித்துக்கொண்டே இருந்துள்ளார். மேலும் தனது கணவரும் சொந்த வியாபாரம் செய்வதால் இருவரும் தங்களது மகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.
இவர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |