என்னுடன் பழகி தாலி கட்டினார்! சந்தேகத்தால் அடித்து துன்புறுத்துகிறார்.. 2வது கணவர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
இரண்டாவது கணவரான காவல் துறை அதிகாரி தன்னை துன்புறுத்துவதாக நடிகை ராதா புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சுந்தரா டிராவல்ஸ், கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ராதா. இவர் தனது 2வது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த நிலையில், தாயாருடன் தனியாக வசித்து வந்தேன்.
தற்போது எண்ணூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் வசந்தராஜ், திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, என்னுடன் பழகி, தன்னை தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், என் மீது சந்தேகம் அடைந்து, தகாத வார்த்தைகளால் பேசி வசந்தராஜ் அடித்து துன்புறுத்துகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.