யாழில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி! வடக்கை வண்ணமயமாக்கும் புலம்பெயர் தமிழர்கள்
இலங்கையின் பாரம்பரியமிக்க வடமாகாணத்தில் எம்மக்களின் வாழ்வாதாரத்தை மெருகேற்றுவதில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது.
எம் மக்களுக்காக பல்வேறு முதலீடுகளையும், பல்வேறு திட்டங்களையும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், பிரம்மாண்ட முதலீடாக SLIIT நிறுவனத்துடன் கைகோர்த்து Northern Uni வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறான செயற்திட்டங்களின் மூலம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதே Northern Uni உரிமையாளரான புலம்பெயர் தமிழர் இந்திரனின் நோக்கமாகும்.
இவர் பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா அவர்களின் கணவரும் ஆவார், இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
வருகிற டிசம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்பா உட்பட பல தென்னிந்திய பிரபலங்கள் பங்குபற்றவுள்ளனர்.
Northern Uni-யினால் முதன்முறையாக யாழில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரபல பாடகரான ஹரிஹரன் பங்கேற்விருக்கிறார்.
அவள் வருவாளா, கொஞ்ச நாள், ஓ மனமே என இவரது குரலில் ரசிகர்களை இன்றளவும் மயக்கி கொண்டிருக்கும் பல பாடல்களை குறிப்பிடலாம்.
டிடி என்ற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க, நடிகர் யோகிபாபு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடன இயக்குனர் சாண்டி, நடன இயக்குனர் கலா, சின்னத்திரை பிரபலங்கள் ஆல்யா- சஞ்சீவ், மைனா நந்தினி மற்றும் பிரபல பாடகர்கள், பாடகிகளும் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகின்றனர்.
அதிகாரப்பூர்வ ஊடக பங்குதாரர்களான லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ்-வுடன் யாழ் முற்றவெளியில் முற்றிலும் எம்மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விரைவில் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறந்த பொழுதுபோக்காகவும், அதே சமயம் பலவேலைத்திட்டங்களுடன் களமிறங்கும் Northern Uni-யை பிரபலப்படுத்தும் நோக்குடன் நடாத்தப்படும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறார் நடிகை ரம்பா!!!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |