மும்மொழிக் கொள்கை திணிப்பதாக பாஜகவில் இருந்து நடிகை விலகல்

BJP
By Sathya Feb 25, 2025 07:56 AM GMT
Report

மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக பாஜகவில் இருந்து நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகை விலகல்

பாஜகவின் கலை, பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாஜகவில் இருந்து விடை பெறுகிறேன்.

அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி

தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கிற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றிவிடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன்.

தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு, தமிழகம் வேறு என்கிற மாற்றான்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது.

மும்மொழிக் கொள்கை திணிப்பதாக பாஜகவில் இருந்து நடிகை விலகல் | Actress Ranjana Nachiyar Quit Bjp

என்னை பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை திணிப்பு திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக் கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை.

இதுவரை பாஜக வழங்கிய எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டிருந்தேன். ஆனால் என்னை சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது.

பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம், அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது.

எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி, பயணிக்கத் தொடங்கிவிட்டேன்.

எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும் பதவியை வாரி தந்தவர்களுக்கும் என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்னென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றியை தெரிவிக்கிறேன்.

என்னுடன் பயணித்து என்னுடன் கடமையாற்றி என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி... இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில், புரட்சிப் பயணம் அது எழுச்சி பயணம் வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம்" என்று கூறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US