தங்கம் கடத்திய நடிகை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரன்யா ராவ்
2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடித்த “மாணிக்யா” படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை ரன்யா ராவ்(31).
இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இவர் அடிக்கடி துபாய் சென்று வந்தததால், டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று வந்ததால், டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு இவரை கண்காணிக்க தொடங்கினர்.
தங்க கடத்தல்
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ரன்யா ராவ், துபாயில் இருந்து பெங்களூர் வருவதை அறிந்த டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இரவு 7:30 மணியளவில் விமானநிலையம் வந்ததடைந்த அவரை விமான நிலைய காவல்துறையினர் உதவியுடன் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையில், 14.8 கிலோ தங்க நகையை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்த போது தனது தந்தை ராமச்சந்திர ராவ் கர்நாடக போலீஸ் டிஜிபி என கூறியுள்ளார்.
வீட்டில் சோதனை
அவரிடம் நடத்திய விசாரணையில் , கடத்தலுக்காக அவர் பிரத்தியேக ஜாக்கெட் மற்றும் பெல்ட் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஒரு கிலோ கடத்தலுக்கு ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.67 கோடி பணமும், ரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளைளும் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, ஒவ்வொரு முறையும் துபாய் சென்று வந்தபோது சோதனையில் இருந்து தப்பியது எப்படி? எவ்வித சோதனையும் இல்லாமல் முக்கிய நபர்கள் செல்லும் பாதையில் இவரை அழைத்து சென்றது யார் என விசாரித்து வருகின்றனர்.
எந்த சம்பந்தமும் இல்லை
இது குறித்து பேசிய அவரின் தந்தையான டிஜிபி ராமசந்திர ராவ், "எனக்கும், ரன்யாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்குள் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை.
4 மாதங்களுக்கு முன் அவருக்கு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர் எங்களுடன் பேசுவதில்லை. அவருடைய கணவர் என்ன வேலை செய்கிறார் எனவும் தெரியாது.
தங்கம் கடத்தியதாக வந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அவர் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |