என் அழகிற்கு பாட்டி சொன்ன இந்த சீக்ரெட் பேஷ்பேக் தான் காரணம்- நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய ரகசியம்
நடிகை ரஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த தெலுங்கு திரைப்படமான கீதா கோவிந்தம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஷ்மிகா தனது இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சரும பராமரிப்பிற்கு முக்கியத்தும் தரும் ராஷ்மிகா தனது அழகின் ரகசியங்கள் குறித்து தகவல் அளித்துள்ளார்.
அதில் தனது பாட்டி கூறிய சீக்ரெட் பேஸ்பேக்கை தான் அவர் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
அழகின் ரகசியம்
இந்த பேஷ்பேக்கை தயாரிக்க சம அளவு மஞ்சள் மற்றும் அரிசி மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி சருமத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் பொலிவாகும் என்று கூறியுள்ளார்.
தனக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகள் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் சருமத்தில் பருக்கள், வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என விளக்கியுள்ளார்.
மேலும் எண்ணெய் உணவுகளை சாப்பிட மாட்டேன் என்றும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். ராஷ்மிகா, தனது சருமத்திற்கு சன்ஸ்கிரீன் இல்லாமல் தன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும் கூறியுள்ளார்.
சூரிய கதிர்கள் நமது சருமத்தில் கருமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதனை தவிர்க்க சன்ஸ்க்ரீன் அப்ளை செய்வது கட்டாயம் என விளக்கியுள்ளார்.
தினமும் வைட்டமின் சி சீரம் தனது சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பொலிவை பாதுகாப்பதாக ராஷ்மிகா தெரிவிக்கிறார்.
சரும பராமரிப்பில் மாய்ஸ்சரைசரை தவிர்ப்பது தவறு என எச்சரிக்கும் அவர், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைப்பதில் மாய்ஸ்சரைசர் சிறந்ததது என்று கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு பலமுறை முகத்தை கழுவுவது தவறு என்கிறார் ராஷ்மிகா. வறட்சியைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |