ஆரம்பத்தில் இருந்தே கேலி செய்யப்படுவது இதயத்தை உடைத்தது! தவறாக சித்தரிக்காதீர்கள்..நடிகை ராஷ்மிகா மந்தனா
தன்னை கேலி செய்பவர்கள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார்
நான் கேலி செய்யப்படும்போது இதயத்தை உடைத்து, வெளிப்படையாக மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது - ராஷ்மிகா மந்தனா
வேதனை பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா தன்னை ஆரம்பத்தில் இருந்தே பலர் கேலி செய்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழில் சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு படங்களில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் ரஷ்மிகா, நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு National Crush ரசிகர்களால் அழைக்கப்பட்ட ராஷ்மிகா, பின்னர் தொடர்ந்து இணையத்தில் கேலிக்கு ஆளானார். இந்த நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், 'என்னுடைய திரைப் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தே நிறைய வெறுப்பை சம்பாதித்து வருகிறேன். நான் கண்டிப்பாக அனைவரது விருப்பமான நபராக இருக்க முடியாது. நீங்கள் ஏற்றுக் கொள்ளாததற்காக என்னை பற்றி தவறாக சித்தரிக்க வேண்டிய அவசியமில்லை.
என்னுடைய நடிப்பால் உங்களை மகிழ்ச்சியாக்க தினமும் முயற்சித்து வருவது எனக்கு மட்டுமே தெரியும். நான் சொல்லாதவற்றை சொல்லி என்னை கேலிக்கு உள்ளாக்குவது வருத்தம் அளிக்கிறது. உங்களுக்காக நான் அன்பை மட்டுமே வைத்திருக்கிறேன். உங்களை மகிழ்விப்பதே எனக்கு மகிழ்ச்சி!' என தெரிவித்துள்ளார்.