காதல் கணவர் நடிகர் தினேஷை பிரிந்து தனியாக வசிக்கும் சரவணன் மீனாட்சி நடிகை ரச்சிதா! இருவருக்கும் என்ன பிரச்சனை?
நடிகை ரச்சிதாவும், அவர் கணவர் நடிகர் தினேஷும் பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தொலைக்காட்சியின் பிரபலமான ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா - தினேஷ் ஜோடி காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருப்பார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் இன்றைய திகதிக்கு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே, இவர்களுக்குள் பிரச்சனை என தகவல் கசிந்த வந்தது. ரச்சிதா கர்நாடகாவை சேர்ந்தவர், தினேஷ் தமிழகத்தை சேர்ந்தவர். இருவரும் கடந்த 2013ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் ரச்சிதா சீரியல்களில் பிசியானார், ஆனால் தினேஷுக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையில் சில வருத்தங்கள் உண்டாகியிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒரே துறையில இருக்கும்போது யதார்த்தமாக அவர்களுக்குள் உருவாகும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள்தான் இவங்க மத்தியிலும் உருவானதாகச் சொல்கிறார்கள்.
அதை இருவரும் சமாளித்த போதும் நண்பர்கள் என சிலர் ஒருசில ஆதாயங்களுக்காக இடையில புகுந்து பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டனர் என்கின்றனர். இதையடுத்து இரு வீட்டாரும் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த முயற்சி கை கொடுக்கவில்லை.
அதனால ஒரே வீட்டில் தொடர்ந்து இருந்தால் பிரச்னைதான் அதிகரிக்கும் என இப்போதைக்கு தனித் தனியே இருக்கலாம் என முடிவு செய்து பிரிந்துள்ளனர், அவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சிகள் நடப்பதாக சீனியர் நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.