இந்தியா வெற்றி பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்- பிரபல நடிகையின் அறிவிப்பு
உலக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டி தொடரில் இந்தியா வென்றால் "கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்" என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை 2023
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா நடத்தி வருகின்றது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அரையிறுதிப்போட்டியில் விளையாடிய 4 அணிகளில் இருந்து 2 அணிகள் வெற்றிப்பெற்று இறுதிபோட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதவிருகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருகின்றது. இந்த முறை கோப்பை இந்தியாவிற்கு தான் என ரசிகர்கள் காத்திருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் இவ்வாறான ஒரு அறிவுப்பை வெளியிட்டுள்ளார்.
"கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்"
பிரபல தெலுங்கு நடிகையான ரேகா போஜ் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் பலவிதமான கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இதை 'இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் இது போன்ற ஒரு அறிவிப்பை ஏற்கனவே 2011-ம் ஆண்டில் நடிகை பூனம் பாண்டே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |