நடிகர், மருத்துவர், இன்ஸ்பெக்டர்! என தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 பேரின் பட்டியலை தைரியமாக வெளியிட்ட பிரபல நடிகை
பிரபல திரைப்பட நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்கு உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக மற்றும் மனரீதியாக துன்புறுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் வழக்கில் சிக்கியதையடுத்து, இந்தியாவில் Metoo இரண்டாம் அலை வீச ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் அடுத்தடுத்து புகார்கள் வந்தபடி உள்ளன.
அதன் படி, பிரபல மலையாள நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்கு உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துன்புறுத்தியவர்கள் என 14 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் பிரபல மலையாள நடிகர் சித்திக் பெயர் இடம் பெற்றுள்ளதால், இது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் உள்ள நந்து அசோகனும், எம்.எஸ்.பதுஹும் என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என ரேவதி சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். சவுரப் கிருஷ்ணன் இணையத்தில் தன்னை கேலி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
- ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
- சித்திக் (நடிகர்)
- ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்)
- சிஜூ (நடிகர்)
- அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
- அஜய் பிரபாகர் (டாக்டர்)
- எம்.எஸ்.பதுஷ் சவுரப் கிருஷ்ணன் நந்து அசோகன் மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
- ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்)
- ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்)
- சருன் லியோ (வங்கி ஏஜென்ட்)
- பினு (இன்ஸ்பெக்டர்)
கடந்த 2016-ஆம் ஆண்டு ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். தற்போதும், அவருடைய பெயரை ரேவதி சம்பத் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.