35 வயதில் பிரபல நடிகை உயிரிழப்பு! வேதனையுடன் இறந்த தகவலை வெளியிட்ட சகோதரி
பிரபல நடிகை ரிங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் 35வது வயதில் உயிரிழந்துள்ளார்.
பாலிவுட் நடிகையான ரிங்கு சிங் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
ரிங்குவுக்கும் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட அவரின் உடல் நிலையில் பின்னர் மோசமானது.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிறி ரிங்கு உயிரிழந்ததாக அவரின் சகோதரி சந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினை ரிங்குவுக்கு இருந்தது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் கூறினார். மருத்துவமனையில் அவர் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டார் என வேதனையுடன் கூறியுள்ளார்.
இதனிடையில் ரிங்கு கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொரோனா முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டார் என தெரியவந்துள்ளது.
குறைந்த வயதில் ரிங்கு மறைந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.