தோனி கதாநாயகன் சுஷாந்தின் மரணத்திற்கு காரணமான நடிகை! அம்பலமான உண்மை
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை போதைக்கு அடிமையாக்கியதாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 32வது வயதில் அகால மரணமடைந்தார். ஆனால், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இருந்ததாலும், போதைப்பொருட்களை அவர் உட்கொண்டிருக்கலாம் என்பதாலும் வழக்கு சி.பி.ஐ மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் சென்றது.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி 2020ஆம் ஆண்டும், அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி என பலர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர். இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா, தனது காதலர் போதைக்கு அடிமையாக தூண்டுகோலாக இருந்துள்ளார். சுஷாந்தின் வாங்கி கணக்கை பயன்படுத்தி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அவர் வாங்கியுள்ளார்.
மேலும் சித்தார்த் பிதானி, ஷோயிக், சாமுவேல் மிராண்டா மற்றும் சாவந்த் உள்ளிட்ட அனைவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மொத்தம் 35 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் கஞ்சா, எல்.எஸ்.டி, கோகோயின் மற்றும் பிற போதைப்பொருட்களை கடத்துவது, விற்பனை செய்வது, விநியோகம் செய்வது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.