அமெரிக்காவில் வசிக்கும் அவுஸ்திரேலிய நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்: வெளியிட்ட காணொளி
அவுஸ்திரேலிய நடிகையான ரூபி ரோஸ், நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்ததில் விலா எலும்புகள் முறிந்ததாக காணொளி வெளியிட்டுள்ளார்.
நடிகை ரூபி ரோஸ்
அமெரிக்காவில் வசித்து வரும் அவுஸ்திரேலிய நடிகையான ரூபி ரோஸ் (Ruby Rose), தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்து காணொளி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த காணொளியில், தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தின் விளிம்பில், கையில் தண்ணீர் குழாயை வைத்துக்கொண்டு அவர் நகர்ந்தபோது வழுக்கி விழுகிறார்.
தண்ணீருக்குள் விழுந்தபோது, அவரது விலா எலும்புகள் குளத்தின் விளிம்பில் பலமாக மோதியதாக பின்னர் தெரிய வந்தது.
நேராக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிற்று
இதுகுறித்த அவரது பதிவில், "என் விலா எலும்புகளுக்கும், இந்த கோடைக்காலத்தின் மீதமுள்ள நாட்களுக்கும் அஞ்சலி. அவை பல இடங்களில் உடைந்துவிட்டன. நேராக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிற்று" என தெரிவித்துள்ளார்.
மேலும் திரெட்ஸ் தளத்திலும் அவர் பகிர்ந்து காணொளியில், 'ஒரு நொடி நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்த நொடி இரண்டு விலா எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கிறேன். என்ன ஒரு மோசமான திங்கட்கிழமை' என்று குறிப்பிட்டிருந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |