பிக்பாஸ் 8: நடிகை சாச்சனா சென்னையில் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் தெரியுமா?
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில், முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருப்பவர் நடிகை சாச்சனா.
நடிகை சாச்சனா மகாராஜா படத்தின் மூலம் சிறுமியாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
சாச்சனா மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடிப்பதற்கு முன்னரே இவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
கெளதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆகஸ்ட் 16, 1947 படத்தில் அவர், மாறுவேடமிட்டு பின்பு வெள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ளும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில், கடந்த வாரம் தொடங்கிய தமிழ் பிக்பாஸின் 8ஆவது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு பதிலாக புதிய ஹோஷ்டாக களமிறங்கியிருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருந்தவர், சாச்சனா. ஆனால் பிக்பாஸிற்கு சென்ற அடுத்த நாளே 24 மணி நேர நாமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.
பின்பு, அந்த வாரத்திலேயே மீண்டும் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இவர்தான் இருப்பதிலேயே இளம் போட்டியாளராக இருக்கிறார்.
வந்த புதிதிலேயே பிக்பாஸில் இருந்து வெளியேறி, பின்பு மீண்டும் உள்ளே நுழைந்து அனைவரின் கவனத்தையும் சாச்சனா ஈர்த்தார்.
21 வயது நிரம்பியிருக்கும் சாச்சனா சென்னையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
இது குறித்து பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னர் அவர் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
அதில், அவர் சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், கிடைக்கும் லீவில்தான் படங்களில் நடித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
"பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் வேலையை விடுவீர்களா?" என்ற கேள்விக்கு அவர், "அதற்கெல்லாம் வாய்ப்பில்லை" என்று கூறியிருந்தார்.
தற்போது பிக்பாஸிற்கு வருவதால், அவர் தனது வேலையை ரிசைன் செய்திருப்பார் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |