உடல் எடையை குறைக்க நடிகை சமந்தாவின் சீக்ரெட் ட்ரிங் இதுதான்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பிரபல நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பலவித டயட் மற்றம் உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர்.
அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா, அவரின் அழகை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கான சீக்ரெட் பானம் இது.
நடிகை சமந்தா கீரைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூதியை தினமும் காலையில் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இலைக்கோசு- 1 கைப்பிடி
- பசலைக்கீரை - 1 கைப்பிடி
- ஆளி விதைகள் - 2 ஸ்பூன்
- சூரிய காந்தி விதைகள் - 1 ஸ்பூன்
- பாதாம் - 1 ஸ்பூன்
- சியா விதைகள் - 1 ஸ்பூன்
- இளநீர்- 1 கப்
செய்முறை
முதலில் இலைக்கோசு மற்றும் பசலைக்கீரையை தண்ணீரில் நன்றாக கழுவி சில நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி இதனுடன் ஆளி விதைகள், சூரிய காந்தி விதைகள், சியா விதைகள் மற்றம் உடைத்த பாதாம் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.
தொடர்ந்து வேகவைத்த கீரைகள் மற்றும் இளநீருடன் கலந்த விதைகள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான மற்றம் ஆரோக்கியமாக ஸ்மூதி ரெடியாகிவிடும்.
இதுபோன்று கீரை வகைககளை கொண்டு செய்யப்படும் ஆரோக்கியமான ஸ்மூதியை தான் தினமும் காலையில் நடிகை சமந்தா குடிக்கிறாராம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |