19 மாதம் கோமா! நடிகை சாவித்ரியின் கடைசி நாட்கள் எப்படி இருந்தது? கண்கலங்க வைக்கும் உண்மைகள்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து லட்சம், லட்சமாக சம்பாதித்து புகழ்பெற்று வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி.
ஆந்திர மாநிலத்தில் பிறந்தவராக இருந்தாலும், தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்த படம் தான் “நடிகையர் திலகம்”.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ்க்கு ஏகப்பட்ட பாராட்டுகளும் தேசிய விருதும் கிடைத்தது, தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது.
ஏழைகளுக்கு உதவும் குணம், நடிப்பில் அசாத்திய திறமை என பன்முகம் கொண்ட சாவித்திரியின் வாழ்வையை புரட்டிப்போட்டது அந்தவொரு சம்பவம் தான்.
தன்னுடைய 32 வயதில் நடிகர் ஜெமினி கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஜெமினி ஏற்கனவே அலமேலு என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தையோடு வாழ்ந்திருந்தார்.
சில ஆண்டுகள் கழித்து தான் சாவித்திரிக்கு பல உண்மைகள் தெரியவந்தது, அதற்கு பிறகு இருவரும் சில மனக்கசப்பு விஷயத்தால் பிரிந்தார்கள், தொடர்ந்து சாவித்திரியும் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார்.
வீடு வாசல் அனைத்தையும் இழந்து சாவித்திரி வறுமையின் பிடியில் தவித்து வந்தார். பின் வறுமையின் காரணமாக சாவித்திரி மலையாள மொழி படத்தில் கவர்ச்சியாக, குடிகாரியாக நடித்திருந்தது ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்திருந்தது.
பிறகு வறுமையின் பிடியில் இருந்து நோயின் பிடியில் சாவித்திரி சிக்கிக்கொண்டு கடைசி நாட்களை எண்ணி கொண்டு இருந்தார். அவருடைய பிள்ளைகள் கூட அவரை விரட்டி அடித்து விட்டார்கள்.
உடல்நிலை மிகவும் மோசமாக மாறி 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்த சாவித்திரி, 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி சென்னை லேடி வெலிங்ஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நடிப்பு திறமையால் சினிமா துறையில் கொடி கட்டி பறந்த சாவித்திரி கணவரை தேர்ந்தெடுப்பதில் செய்த சிறிய தவறால் தனது வாழ்க்கையே தொலைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.