ஒன்றரை மாதங்களாக நடிகையை வன்கொடுமை செய்த நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்
மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு நடிகை ஒருவரை ஒன்றரை மாதங்களாக வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் கடந்த 22ஆம் திகதி நடிகை ஒருவர் பொலிசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தாயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு தன்னை கடந்த ஒன்றை மாதங்களாக உடல் ரீதியான தாக்குதல் மற்றும் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது பேஸ்புக் பதில் விஜய் பாபு குறித்த அதிர்ச்சிகரமான விடயங்களை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'எனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றுபவராக, எனது மீட்பராக விஜய் பாபு நடந்து கொண்டார். ஆனால் நல்லவர் என்ற போர்வையில், பின்னர் அவர் என்னை வன்கொடுமை செய்தார்.
கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர, மது மற்றும் மகிழ்ச்சி மாத்திரை என்ற போதைப்பொருளையும் உட்கொள்ளும்படி விஜய் பாபு என்னை கட்டாயப்படுத்தினார். திரையுலகில் அவரது செல்வாக்கு காரணமாக, மற்றவர்களிடம் நான் அனுபவித்த வன்கொடுமை பற்றி விவாதிப்பதில் எனக்கு பயம் இருந்து வந்தது. விஜய் பாபுவின் வலையில் மேலும் பல பெண்களும் சிக்கியுள்ளனர் என்று அறிந்தேன். அவர் என்னுடைய நிர்வாண வீடியோவை பதிவு செய்து, அதனை காண்பித்து மிரட்டியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திடீரென பேஸ்புக் நேரலையில் உரையாடிய விஜய் பாபு அவர் மீது புகார் தெரிவித்த பெண்ணை தனக்கு 5 ஆண்டுகளாக தெரியும் என்று கூறி அவர் குறித்த அடையாளத்தை வெளிப்படுத்தினார். மேலும் தான் குற்றமற்றவர் என்றும், பலியாடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், குறித்த பெண் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து கேரள பொலிஸ் தரப்பில் கூறுகையில், பாதிக்கப்பட்ட நடிகையின் பெயர் மற்றும் அடையாளத்தை விஜய் பாபு வெளிப்படுத்தியது குற்றமாகும். இதனால் அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.