விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செம்பருத்தி ஷபானா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா விவாகரத்து குறித்து பரவி வருகின்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய செம்பருத்தி சீரியல் இன்று வரை சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிகை ஷபானா, பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகின. ஆனால் இவர்களது திருமணத்தில் ஆர்யன் வீட்டாருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே இருவருக்கும் விவாகரத்து என்பது போன்ற வதந்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் திகதி நடந்த நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனால் இந்த ஜோடிகளுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகிறது. மேலும் பரவி வந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளியாக அமைந்து விட்டது.