திருமணம் முடிந்த சில நாட்களிலேயே.. செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா?
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பதாக செய்திகள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய செம்பருத்தி சீரியல் இன்று வரை சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிகை ஷபானா, பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகின.
ஆனால் இவர்களது திருமணத்தில் ஆர்யன் வீட்டாருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது, ஷபானாவின் நெருங்கிய தோழியான ரேஷ்மா தான் இந்த கல்யாணத்துக்கு முழு காரணமாக இருந்துள்ளார்.
கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகியும் ஷபானா இன்று வரை ஆர்யன் வீட்டுக்கு செல்லவில்லையாம்.
இந்நிலையில் ஆர்யன் வீட்டில் உள்ளவர்கள் நீயா விலகிடு, நாங்க ஆர்யனுக்கு வேற ஒரு பொண்ணைப் பார்த்திருக்கோம் என்பது போல மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே ஷபானாவும், நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னைகள் இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என்று பதிவு செய்திருந்தார்.
ஷபானாவின் இந்த பதிவு பலருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது, மேலும் ஆர்யன் மற்றும் ஷபானாவுக்கு இடையே மனக்கசப்பு அதிகரித்து கொண்டிருக்கிறதாம், எனவே விரைவில் இருவரும் பிரிந்துவிடலாம் என தெரிகிறது.