31 வயதில் விவாகரத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி
மண்டேலா பட புகழ் நடிகை ஷீலா திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பரதநாட்டிய கலைஞர்
தமிழில் ஆறாது சினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷீலா ராஜ்குமார் (31). பரதநாட்டிய கலைஞரான இவர் டூலெட் படத்தின் மூலம் கதாநாயகி ஆனார்.
அதனைத் தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி படங்களில் நடித்திருந்தாலும், யோகி பாபுவுடன் இணைந்து நடித்த 'மண்டேலா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி
நடிப்பு பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை ஷீலா திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது, ''திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும் அன்பும் சோழன்'' என அவர் கூறியுள்ளதால் தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தெரிய வந்துள்ளது.
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
— Sheela (@sheelaActress) December 2, 2023
நன்றியும் அன்பும் @ChozhanV
ஷீலாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தையும், ஆதரவையும் ஒரு சேர தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |