பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைப்பது எப்படி? நடிகை ஸ்ரேயா சொன்ன சூப்பர் தகவல்
பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பது குறித்து நடிகை ஸ்ரேயா அவர்கள் சில தகவல்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் விஜய், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் சேர்ந்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரே கோஷ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சோசியல் மீடியா பக்கத்தில் தனது மகளுக்கு ராதா என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். பிரசவத்திற்கு பிறகு எடையை குறைத்தது குறித்து ஸ்ரேயா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, குழந்தை பிறந்த பிறகு பல பெண்களுக்கு வெயிட் போட்டு விடுகிறது.
எடையை குறைக்க நான் கதக் ஆடினேன். மேலும் யோகா செய்தேன். தனக்கு உடல் எடையை குறைக்க கதக்கும், யோகாவும் தான் உதவியாக இருந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.