பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல! பரபரப்பை கிளப்பிய புகார்
பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணமடைந்தது விபத்தல்ல என்று ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த நடிகை
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தனது 31வது வயதிலேயே, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல என்று ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மரணம் விபத்தல்ல
சிட்டிமல்லு என்ற அந்த நபர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் நிலையத்திலும் சௌந்தர்யாவின் மரணம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், "நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. சௌந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு (நடிகர்) முயற்சித்திருக்கிறார். ஆனால், நிலத்தை விற்பனை செய்ய சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறர்.
இந்த நிலையில், சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு, அந்த நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார். எனவே, இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
அந்நபரின் இந்த புகார் ஆந்திராவிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |