MeToo புகாருக்கு பின் சொந்த வீட்டிலே துன்புறுத்துகிறார்கள் - கதறி அழும் நடிகை தனுஸ்ரீ தட்டா
தனது சொந்த வீட்டுக்குள் துன்புறுத்தல் நடப்பதாக நடிகைதனுஸ்ரீ தத்தா புகாரளித்துள்ளார்.
தனுஸ்ரீ தட்டா
41 வயதான பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தியாவில் #MeToo இயக்கத்தை முன்னெடுத்துவர்களில் தனுஸ்ரீ தட்டாவும் ஒருவராக கருதப்படுகிறார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாரளித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
2019 ஆம் ஆண்டு மும்பை காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், நானா படேகர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சொந்த வீட்டிலே துன்புறுத்துலை எதிர்கொள்வதாக கண்ணீர் மல்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஸ்ரீ.
சொந்த வீட்டில் துன்புறுத்தல்
இதில் பேசிய அவர், "மீ டூ புகார் கூறியது முதல் இன்று நான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறேன். என் வீட்டிலே துன்புறுத்துகிறார்கள். காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தேன்.
காவல் நிலையத்திற்கு வந்து முறைப்படி புகார் செய்யும்படி தெரிவித்துள்ளனர். நான் நிச்சயம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்வேன். வீட்டில் என்னால் எதையும் செய்ய முடியவில்லை.
என்னால் வீட்டில் வேலைக்கு கூட ஆள்களை நியமிக்க முடியவில்லை. அவர்கள் வீட்டு வேலைக்காரர்களை திட்டமிட்டு எனது வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.
அவர்கள் அனுப்பிய ஆட்கள் என் வீட்டில் பொருட்களைத் திருடிச் செல்கின்றனர். இதனால் வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளாமல் அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். இதனால் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.
வீட்டிற்கு வெளியில் வந்து சத்தம் போடுகிறார்கள். எனது வீட்டில் நான் துன்புறுத்தபடுகிறேன். யாராவது எனக்கு உதவி செய்யுங்கள். இது தொடர்பாக கட்டிட நிர்வாகத்திடம் புகார் செய்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |