அவமரியாதையை ஏற்றுக்கொள்ள முடியாது: பாஜக மாநிலத் தலைவருக்கு நடிகை த்ரிஷா கண்டன அறிக்கை
செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சையைக்குரிய வகையில் பேசிய நயினார் நாகேந்திரனுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பேச்சு
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது சர்ச்சையாகி கண்டனத்திற்குள்ளானது.
நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது வழக்கறிஞர் வாயிலாக நயினார் நாகேந்திரனுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷா கண்டனம்
அதில், "மாநில அரசியலில் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா? இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. அவமரியாதையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம். அரசியல் நிலைப்பாட்டில் நடுநிலையுடன் இருக்கவே நான் விரும்புகிறேன்.
எனக்கு தொடர்பில்லாத விடயங்களில் என்னை தொடர்புப்படுத்தி பேச வேண்டாம் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Disrespect should and always will be called out. pic.twitter.com/FmXdIBvAJ6
— Trish (@trishtrashers) February 16, 2026

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |