41 வயதிலும் உச்ச நடிகையான திரிஷாவின் சொத்து மதிப்பு தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
திரிஷா
மொடலாக இருந்து நடிகையாக மாறிய திரிஷா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
22 ஆண்டுகளாக கதாநாயகியாகவே வலம் வரும் திரிஷா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்க திரிஷா 4 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
சினிமா மற்றும் விளம்பரப்படங்கள் மூலமாக திரிஷா ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு
திரிஷாவுக்கு சென்னையில் 6 கோடி மதிப்பில் உள்ள சொகுசு வீட்டில் அவரது தாய் மற்றும் பாட்டி வசித்து வருகின்றனர்.
அதேபோல் ஆந்திராவிலும் அவருக்கு ஒரு வீடு உள்ளது என்று கூறப்படுகிறது. திரைத்துறை மட்டுமின்றி பல ரியல் எஸ்டேட் தொழிலிலும் திரிஷா முதலீடு செய்துள்ளார்.
லட்சக்கணக்கான மதிப்புடைய கார்களை திரிஷா வைத்துள்ளார். அவரது Range Rover கார் 60 லட்சம், Mercedes-Benz கார் 63 லட்சம், BMW கார் 40 லட்சம் மதிப்புடையவை என்று தகவல்கள் உள்ளன.
திரிஷாவின் பெயரில் 85 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் கமல் ஹாசன், சிரஞ்சீவி, மோகன் லால் ஆகிய பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து வருவதால் விரைவில் 100 கோடி சொத்துக்கு அதிபதியாவார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |