நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இரட்டையர்களான என் மகன்கள் விரும்புகிறார்கள்! மனம் திறந்த 41 வயது நடிகை
இரட்டையர்களான தன்னுடைய மகன்கள் நான் மறுமணம் செய்ய வேண்டும் என விரும்புவதாக 41 வயதான நடிகை ஊர்வசி தோலாகியா கூறியுள்ளார்.
ஹிந்தி நடிகையான ஊர்வசி 16 வயதில் திருமணம் செய்து கொண்ட நிலையில் 17 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.
இதன்பின்னர் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது ஊர்வசிக்கு 41 வயதாகிறது. அவர் கூறுகையில், நான் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என மகன்கள் நினைக்கிறார்கள்.
நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அடிக்கடி என்னிடம் அவர்கள் கூறுகிறார்கள். இது நடக்க வேண்டும் என்றால் நிச்சயம் நடக்கும்.
இன்னொரு விஷயம் என்னவென்றால், நான் மிகவும் சுதந்திரமான பெண், என் சொந்த சொற்களின்படி வாழ்க்கையை வாழ்ந்தேன். இதை புரிந்து கொள்கிறவர் தான் என் வாழ்க்கைக்கு தேவை.
நேர்மையாக கூற வேண்டும் என்றால் எனக்கு திருமணம் பற்றி சிந்திக்க நேரமில்லை.
நான் எப்போதுமே பிஸியாக வேலை செய்வதோடு, என் மகன்கள் இருவருக்கும் நல்ல கல்வியும் வசதியான வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுக்கவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.