பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்! அவரே வெளியிட்ட புகைப்படம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிரபல சீரியல் நடிகையான வைஷாலி தனிகா தன்னுடைய திருமணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜராணி சீசன்-1 சீரியலில் தங்கையாக நடித்த வைஷாலி தனிகா அதன் பின், மாப்பிள்ளை, பொம்மகுட்டி அம்மாவுக்கு, என பல சீரியல் நடித்து மிகவும் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து வெள்ளித்திரையில், கதகளி, திரி, சங்கிலி புங்கிலி கதவ திற என பல படங்களில் நடித்துள்ள இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருமணத்திற்கான ஷாப்பிங் இது என்று குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளையும் உடன் இருந்தார், அவரின் பெயர் சத்யதேவ் என்பது குறிப்பிடத்தக்கது.