ரம்யா கிருஷ்ணனுடன் மோதும் வனிதா விஜயகுமார்? அன்று நடந்தது என்ன?
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா திடீரென விலகுவதாக அறிவித்து அதுதொடர்பான அறிக்கையையும் வெளியிட்டார்.
அதில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். அதிகார துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களை நான் ஏற்பது இல்லை.
ஆனால் பணி செய்த இடத்தில் எனது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத நபரால் துன்புறுத்தப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். நியாயமற்ற முறையிலும் நடத்தப்பட்டேன்.
வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்தவில்லை.
பெண்களும் அதுபோல் நடந்து பொறாமைப்படுவதும், வாய்ப்புகளை அழிக்க முயற்சிப்பதும் மோசமான செயல்.
வயதில் மூத்தவர் முன்னேற கஷ்டப்படுபவர்களை இழிவாக பார்ப்பதும், அவமானப்படுத்துவதும் நடக்கிறது.
கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்க துடிக்கும் என்னையும் துன்புறுத்துகிறார் என தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தகராறே வனிதாவின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது, பத்துக்கு வெறும் 1 மதிப்பெண் மட்டுமே வழங்கியதால் வனிதா கோபமானதாகவும் தெரிகிறது.
ஆனால் இவ்வாறு சமூகவலைத்தளங்களில் உலாவும் காரணங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.