என் குழந்தையை பாதிக்கக்கூடாது என்பதால் அந்த முடிவை எடுத்தேன்! நடிகை வனிதா
பிரபல சின்னத்திரை நடிகை வனிதா ஹரிஹரன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் வயிற்றில் உள்ள குழந்தைக்காக சீரியல் நடிப்பில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்.
சின்னத்திரையில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த வனிதா ஹரிஹரனின் முகத்தை யாரும் மறந்துவிட முடியாது. வெள்ளித்திரையிலும் கால்பதித்த வனிதா 'டார்லிங்' மற்றும் 'செஞ்சிட்டாலே என் காதல' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக மகராசி சீரியலில் ராகிணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் திடீரென தொடரை விட்டு விலகினார். பின்னர் கணவருடன் பெல்ஜியம் சென்று விட்ட வனிதா தற்போது கர்ப்பமான வயிறுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் எங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகியுள்ளது.
என்னுடைய கேரியருக்காக குழந்தை பெற்று கொள்வதை தள்ளிப்போட்டோம். இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்ததால சீரியலிலிருந்து விலகிட்டேன்.
நான் நடிதது வந்தது வில்லி கதாபாத்திரம். அது நடிப்பாக இருந்தாலும் கூட என்னுடைய குழந்தையை பாதிக்க கூடாது என நான் சீரியலிலிருந்து வெளியேறினேன் என தெரிவித்துள்ளார்.