NIA சம்மன் ஏதும் அனுப்பவில்லை!- நடிகை வரலட்சுமி
கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கிய சம்பவத்தில் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14ஆவது நபராக ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அப்படியான சம்மன் ஏதும் தனக்கு கொடுக்கப்படவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆதிலிங்கம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ.வினால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று பரப்பப்படும் அனைத்து செய்திகளும் பொய்யானவை மற்றும் வெறும் வதந்திகள். அப்படி எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை.
#Fakenews pic.twitter.com/g13x9vFaQZ
— ????????? ??????????? (@varusarath5) August 29, 2023
திரு.ஆதிலிங்கம் 3 வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஃப்ரீலான்ஸ் மேலாளராக ஒரு குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் நான் பல ஃப்ரீலான்ஸ் மேலாளர்களுடன் ஒரே நேரத்தில் பணிபுரிந்தேன்.
அவரது பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை எங்களுக்குள் எந்த தொடர்பும், தொடர்பும் இல்லை. உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |