நடிகை வரலட்சுமிக்கு சம்மன்! போதை பொருள் வழக்கில் நேரில் ஆஜராக NIA உத்தரவு
போதைப்பொருள் ஆயுதக்கடத்தல் வழக்கில் நேரில் ஆஜராகும்படி நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி சம்மன் அனுப்பி உள்ளது.
போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளரான ஆதிலிங்கம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்த தகவலை பெற நடிகை வரலட்சுமிக்கு நேரில் ஆஜராக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது.
போதைப் பொருள் கடத்தல்
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.எ நடத்திய விசாரணையில் நடிகை வரலக்ஷ்மியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருப்பது தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வரலட்சுமிக்கு சம்மன்
இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு குறித்த தகவல்களை பெறுவதற்கு நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளது.
ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேறு யாரேனும் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |