பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93 வயதில் காலமானார்.
தமிழில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகையான வத்சலா ராஜகோபால், தனது 93 வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
வத்சலா ராஜகோபால்
1979 ஆண்டு முதல் 25 ஆண்டுகளாக, 450 மேடை நாடகங்களில் நடித்தவர் வத்சலா ராஜகோபால்.
1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தில், 60 வயதில் பாட்டி வேடத்தில் நடிக்கத் தொடங்கிய வத்சலா ராஜகோபால் பல்வேறு படங்களில் நடித்தார்.
93 வயதான வத்சலா ராஜகோபால் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை இன்று காலமானார்.
திரையுலகினர் இரங்கல்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், 1953யில் சென்னைக்கு குடியேறி தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி இருக்கிறார்.
சதி லீலாவதி, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம், வின்னர் ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். கடைசியாக 2013-யில் வெளியான கல்யாண சமையல் சாதம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சின்னத்திரையிலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற வத்சலா ராஜகோபால் இவர், நகைச்சுவை மற்றும் உணர்வுமிக்க கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார்.
வத்சலா ராஜகோபாலின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
