பிரபல நடிகை வித்யு பாலனுக்கு நடந்த முடிந்த திருமணம்! முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன் மனைவி
பிரபல திரைப்பட நடிகையான வித்யுபாலனுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவரின் புகைப்படத்தை செல்வராகவன் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில், கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில், வெளிவந்த நீ தானே என் பொன் வசந்தம் படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வித்யுபாலன்.
அதன் பின், தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வித்யுபாலன், பிட்னஸரான சஞ்சை என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி நடத்துவது தொடர்பான புகைப்படம் எல்லாம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அவருடைய திருமணம் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை பிரபல இயக்குனரான செல்வராகவனின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.