என்ன மிஸ்டர் சீமான்? சாபம்லாம் விடுறிங்க- விஜய்க்கு ஆதரவாக விஜயலட்சுமி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் தவெக கட்சியின் கொள்கைகளை எதிர்த்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி சீமானை தாக்கி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆறு முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார் அளித்திருந்தார் விஜயலட்சுமி.
இந்த புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இருப்பினும், அவ்வப்போது சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வரும் விஜயலட்சுமி தற்போது விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜயலட்சுமி கூறியதாவது..,
"என்ன மிஸ்டர் சீமான் சாபம்லாம் விடுறீங்க, நேற்று விஜய் அண்ணனுக்கு ஒன்று ரோட்டின் அந்த பக்கம் இரு அல்லது இந்த பக்கம் இரு, நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துப் போய்விடுவாய் என சாபம் விட்ருக்கிங்க.
சபாம் விடுவதற்கு நீங்கள் என்ன உத்தமரா? அண்ணன் விஜய்யாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் கொள்கை ரீதியாக தானே தவறு செய்துள்ளார்கள். அதுவும் உங்கள் பிரகாரம்தான், மக்கள் அவர்களின் கொள்கை குறித்து எதுவும் சொல்லவில்லை. நீங்க தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
கொள்கை ரீதியாக தவறு செய்பவர்கள் லாரி அடித்து சாவார்கள் என்றால் எங்களை மாதிரி பெண்களின் வாழ்க்கையை சீரழித்து எங்களை நடு ரோட்டில் விட்ட நீங்கள் எது அடித்து சாவீர்கள்?
"என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க.. நீங்க என்ன உத்தமரா சீமான்?
— TN Streamline (@TNStreamline) November 3, 2024
- விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி#Seeman #Vijay #Vijayalakshmi pic.twitter.com/fLfrG2lJco
முதல்ல உங்க கட்சியில் இருக்கிற ஓட்டைகளை சரி பண்ணுங்க. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடக்கிறதாம். அடுத்து திருச்சி சூர்யா உங்களின் ஆபாசம் வீடியோவை ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்கப் போகிறாராம். அதெல்லாம் என்னன்னு போய் பாருங்க.
திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திமுகவுக்கு தெரியும். விஜய் அண்ணாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விஜய் அண்ணாவுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவர்கள் வேலை என்ன என்று தெரியும்.
உலகத்திலேயே நீங்கள் மட்டும் தான் தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்காக பார்க்க தெரியாமல் காலையில் எழுந்து சும்மா பப்ளிசிட்டி பண்ணிக்கொண்டும் சாபம் கொடுத்துக்கொண்டும் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள்.
பெரிய உத்தமர் மாதிரியோ கண்ணகி மாதிரியே சாபம் எல்லாம் விடாதீர்கள். 24 மணி நேரமும் பெங்களூரில் இருந்து நான்தான் உங்களுக்கு சாபம் கொடுத்து கொண்டு இருக்கிறேன்" என விஜயலட்சுமி பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |