சொந்தமாக தீவு வைத்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகை: யார் தெரியுமா?
இன்றைய காலத்தில் சொந்தமாக நிலம் வைத்திருப்பது பெரிய விடயம்.
ஆனால் நாட்டில் சில பணக்காரர்கள் தனியார் தீவுகளை சொந்தமாக வைத்துள்ளனர் என்பது ஆச்சரியமான ஒன்று.
இன்னும் சொல்லப்போனால், பாலிவுட்டில் மூன்று நடிகர்கள் தனியார் தீவுகளை சொந்தமாக வைத்துள்ளனர்.
மேலும், ஒரு நடிகையும் சொந்தமாக தீவு ஒன்றை வைத்திருக்கிறார்.
அந்தவகையில், தனியார் தீவை சொந்தமாக வைத்திருக்கும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாலிவுட்டில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
அவர் நடித்த மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2 மற்றும் கிக் ஆகியவை படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், ஹவுஸ்ஃபுல் 3 ஜாக்குலினுக்கு கடைசி வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு ஜாக்குலின் இலங்கையில் ஒரு தனியார் தீவை சொந்தமாக வாங்கினார்.
அந்த தீவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு ஆடம்பர பங்களா கட்ட திட்டமிட்டுள்ளதாக ஒரு உறுதியாகத தகவல்கள் வெளியாகின.
இந்த தனியார் தீவை சுமார் 600 ஆயிரம் டாலர்களை செலவு செய்து நடிகை ஜாக்குலின் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |