நடிகை யாஷிகா மருத்துவமனையில் கண்விழித்த நிலையில் பொலிசாரிடம் பேசிய வார்த்தைகள்! அம்பலமான முக்கிய தகவல்கள்
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ள நடிகை யாஷிகா கண்விழித்த நிலையில் பொலிசாரிடம் பேசியுள்ளார்.
சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நடிகை யாஷிகா ஆனந்த் அவர் தோழி வள்ளி ஷெட்டி பவனி மற்றும் செய்யத், அமீர் என்ற அவரது 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் சென்னை நோக்கி டாடா ஹேரியர் (TATA Harrier)காரில் வந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 11 மணியளவில் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அது சாலை நடுவே உள்ள செண்ட்டர் மீடியனில் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளே அமர்ந்திருந்த வள்ளி ஷெட்டி பவனி, வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாஷிகா ஆனந்த்துக்கு இடுப்பு எலும்பு முறிந்ததோடு, வலது காலும் முறிந்திருக்கிறது. பின்பக்கம் அமர்ந்திருந்த செய்யதும் அமீரும் லேசான காயங்களோடு உயிர்தப்பிய நிலையில், மூவரும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யாஷிகாவிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது காரை ஓட்டிவந்தது நான் தான் என யாஷிகா கூறினார். மேலும் மது அருந்திவிட்டு அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
அதிவேகமாக இயக்கியதால் விபத்து என்பது தெரியவந்துள்ளதாகக் கூறும் பொலிசார் விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.