நடிகை யாஷிகா கைதாகிறார்! போதையில் கிறங்கிய நிலையில் கிடந்த 2 ஆண் நண்பர்கள்... சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் கிடைத்தது

accident arrest car yaashika anand
By Raju Jul 27, 2021 07:00 AM GMT
Report

அதிக வேகத்தில் கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய, நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சைக்கு பின் கைதாகவுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா வார விடுமுறை நாட்களில், சில நடிகர்கள், ஆண் நண்பர்களுடன், கிழக்கு கடற்கரை சாலையில், 'ஜாலி'யாக ஊர் சுற்றி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரியும் தோழி வள்ளிசெட்டி பவானி (28) என்பவரை சென்னைக்கு வரவழைத்துள்ளார்.

இவரது தந்தை ராதாகிருஷ்ணா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் வசிக்கிறார். யாஷிகா ஆனந்த் டில்லியைச் சேர்ந்தவர். இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கிறார்.

நடிகை யாஷிகா கைதாகிறார்! போதையில் கிறங்கிய நிலையில் கிடந்த 2 ஆண் நண்பர்கள்... சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் கிடைத்தது | Actress Yashika Anand Will Get Arrest Police Says

இவர்கள் இருவரும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சையது, (21) அமீர் (19) ஆகியோருடன் இரவு, யாஷிகா ஆனந்தின், 'டாடா ஹாரியர்' காரில், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் சென்றுள்ளனர்.

இவர்களது கார் இரவு, 10:12க்கு கானத்துாரை கடந்துள்ளது. நான்கு பேரும், ஆட்டம், பாட்டம் என, கும்மாளத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், காரிலேயே பார்ட்டி கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சென்னை திரும்பினர்.

காரின் மேல் பகுதியில், திறக்கும் வசதியுள்ள இடத்தில் தலையை நீட்டி, கைகளை விரித்து வள்ளிசெட்டி பவானி, பலமாக சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார்.

சையது, அமீர் ஆகியோர் பின் இருக்கையில் போதையில் கிறங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இரவு, 11:15 மணியளவில் கார், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, சூலேரிக்காடு பகுதியில், 122 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளது. வள்ளிசெட்டி பவானி முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.காருக்குள் பாடல் அலறியது.

நடிகை யாஷிகா கைதாகிறார்! போதையில் கிறங்கிய நிலையில் கிடந்த 2 ஆண் நண்பர்கள்... சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் கிடைத்தது | Actress Yashika Anand Will Get Arrest Police Says

அதற்கு ஏற்ப நான்கு பேரும் கூச்சல் போட்டபடி இருந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், யாஷிகா ஆனந்த் காரை, சாலையின் மையத்தடுப்பில் மோதினார்.

அப்போது, காருக்கு வெளியே துாக்கி வீசப்பட்ட வள்ளிசெட்டி பவானி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.கார், 50 தடவைக்கு மேல் உருண்டு சாலை ஓரத்தில் கிடந்தது.

காருக்குள் யாஷிகா ஆனந்த், இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கிடந்தார். சையது, அமீர் ஆகியோர் பலத்த காயத்துடன் மரண பீதியில், 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறினர்.

சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட மூவரையும் காப்பாற்றினர். இவர்கள், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது; அதற்கான அறுவை சிகிச்சை முடிந்து, அவர் சுய நினைவுக்கு திரும்பி உள்ளார். அதேபோல, அமீர், சையது ஆகியோரும் சிகிச்சைக்கு பின் தேறியுள்ளனர்.

நடிகை யாஷிகா கைதாகிறார்! போதையில் கிறங்கிய நிலையில் கிடந்த 2 ஆண் நண்பர்கள்... சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் கிடைத்தது | Actress Yashika Anand Will Get Arrest Police Says

இது தொடர்பாக யாஷிகாவின் சகோதரி ஓஷின் ஆனந்த் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில், ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.. யாஷிகா ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண் விழித்துவிட்டார்.

அவருக்கு பல்வேறு இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதால், இன்னும் வரும் நாட்களில் மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன என பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து, யாஷிகா மீது, மாமல்லபுரம் பொலிசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே, மாமல்லபுரம் - சென்னை வரும் வழியில், கிருஷ்ணன்காரணை என்ற இடத்தில் பதிவாகி உள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொலிசார் கைப்பற்றினர்.

அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவியிலும், 122 கி.மீ., வேகத்தில் யாஷிகா கார் ஓட்டியது பதிவாகி உள்ளது. அதனால், இவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதை ரத்து செய்ய, பொலிசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். பொலிசார் கூறுகையில், இந்த விபத்து தொடர்பாக, சிகிச்சைக்கு பின் யாஷிகா ஆனந்த் கைது செய்யப்படுவார் என கூறியுள்ளனர்.

நடிகை யாஷிகா கைதாகிறார்! போதையில் கிறங்கிய நிலையில் கிடந்த 2 ஆண் நண்பர்கள்... சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் கிடைத்தது | Actress Yashika Anand Will Get Arrest Police Says

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US