பல எலும்பு முறிவுகளால் நடிகை யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை! பலத்த காயத்துக்குள்ளான அவரின் தற்போதைய மனதை உருக்கும் புகைப்படம்
விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி மனதை உருக்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்த யாஷிகா ஆனந்த் சில வாரங்களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது உடல்நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, அடுத்த 5 மாதங்களுக்கு தான் படுக்கையிலேயே தான் இருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல எலும்பு முறிவுகளால் யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
படுக்கையில் படுத்திருக்கும் யாஷிகா, வலது காலில் கட்டுப்போட்டு, தலையணை மேல் வைத்திருக்கிறார். படத்தைப் பார்க்கும் போது, அவர் பலத்த காயத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.