மூன்று மாதங்களுக்கு பிறகு.. நடிகை யாஷிகாவின் நிலை இது தான்! அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை யாஷிகா கார் விபத்துக்கு பிறகு முதல் முறையாக நடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்கி வருபவர் யாஷிகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகினர்.
பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பல படவாய்ப்புகள் இவரை சூழ்ந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு யாஷிகாவின் தோழியான வள்ளிசட்டி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு இடுப்பு, கால் ஆகியவற்றில் எலும்புகள் முறிந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக தான் நடந்துள்ளதாக யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் உதவியுடன் தான் நடக்க முயலும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் யாஷிகா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.