நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமாகியுள்ளார்.
பாக்யராஜ் காலமானார்
1977 ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராகவும், பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர், 1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய இவர், பல்வேறு படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
"இது நம்ம ஆளு" படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார் பாக்யராஜ்.
தனது திறமைக்காக பிலிம்பேர் விருதுகள், உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் பிரவீணா என்னும் உடன் நடித்த நடிகையை திருமணம் செய்து கொண்டார். அவர் சில ஆண்டுகளுக்கு இறந்த பின்னர் நடிகை பூர்ணிமாவை 2வது திருமணம் செய்து கொண்டார்.
73 வயதான பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
பாக்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்திய அவரது குருநாதரான பாரதிராஜா இறந்த 15 நாட்களில், பாக்யராஜ் இறந்தது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்யராஜின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |