பிரித்தானியாவில் உண்மையான கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டதை விட அதிகம்! போட்டுடைத்த சஜித் ஜாவித்
பிரித்தானியாவில் உண்மையான கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் என நாட்டின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, தற்போது வரை ஒமிக்ரான் குறித்து போதிய தகவல் எங்களுக்கு தெரியாது. புதிய மாறுபாடு மிக மிக வேகமாக பரவுகிறது, தரவில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக வேகத்தில் பரவுகிறது.
பிரித்தானியாவில் உண்மையான கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்.
ஏனெனில், அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளவதில்லை மற்றும் மக்கள் பரிசோதனை முடிவுகளை பெறுவதில் தாமதம் இருக்கிறது.
அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, உண்மையான எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு அல்லது கால் பகுதியே ஆகும்.
ஒமிக்ரானை பொறுத்தவரை, அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இன்னும் குறைவாக இருக்கலாம்.
இரண்டு டோஸ் தடுப்பூசி, அறிகுறி உள்ள தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அளிக்குமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், 3 டோஸ் தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது வரை ஒமிக்ரானின் எவ்வளவு வீரியமானது என தெரியவில்லை.
எனினும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து கிடைத்த ஆரம்ப தரவுகளில் ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான வீரியத்துடன் பெரியளவில் பரவும் தொற்றினால் கூட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சஜித் ஜாவித் எச்சரித்துள்ளார்.